search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப சிதம்பரம்"

    • பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தலுக்குப் பிறகு இதன் விலை உயர்த்தப்படமாட்டாது என்று இந்த அரசு சொல்லுமா?
    • சமையல் சிலிண்டர் விலை 700 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தேர்தலுக்கு முன்னதாக 100 ரூபாய் குறைத்துள்ளது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக மாறாமல் இருந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய மந்திரி அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் சமையல் சிலிண்டர் விவகாரத்தில் பா.ஜனதா என்ன செய்ததோ? அதே சாதுரியத்தை இதிலும் கடைபிடித்துள்ளனர் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பியும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த வாரம் நான் ஊடக சந்திப்பின்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் எனக் கூறியிருந்தேன். அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தலுக்குப் பிறகு இதன் விலை உயர்த்தப்படமாட்டாது என்று இந்த அரசு சொல்லுமா?

    பா.ஜனதா அரசால் சமையல் சிலிண்டர் விலை 700 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தேர்தலுக்கு முன்னதாக 100 ரூபாய் குறைத்துள்ளது.

    அதே சாதுரியத்தை பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் கையாண்டுள்ளது.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. தனது அரசியல் நலன்களை முன்னெடுக்க மத்திய விசாரணை அமைப்புகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
    • எதிர்க்கட்சி இல்லாமல் நாடு ஜனநாயக நாடாக இருக்காது.

    கொல்கத்தா:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கொல்கத்தாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து என்னால் எதையும் கூற இயலாது. ஏனெனில் அந்தக் கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவிலோ அக்கூட்டணியின் கூட்டங்களிலோ நான் இடம்பெறவில்லை. ஆனால், பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் மீண்டும் ஆட்சிக்கு வருவது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளதாக நான் நம்புகிறேன்.

    பா.ஜ.க. மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய ஜனநாயகத்தை அவர்கள் சீர்குலைத்து விடுவார்கள். ஜனநாயக அமைப்புகளை அக்கட்சியினர் படிப்படியாக சிதைத்து விடுவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை தாங்களாகவே அறிவித்துக் கொள்ளும் ஆளுங்கட்சியைக் கொண்ட பல்வேறு நாடுகளைப் போன்று இந்தியாவும் மாறிவிடும்.

    நிலையான, ஆழமாக வேரூன்றிய கட்சிகளைக் கொண்டு இந்தியா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆனால், பல்வேறு கட்சிகளை உடைத்து அதன் மூலம் பா.ஜ.க. தனது கூட்டணியை உருவாக்கிக் கொள்கிறது. அதன் முக்கிய கூட்டணிக்கட்சிகளாக தேசியவாத காங்கிரஸின் ஒரு பிரிவு, சிவசேனாவின் ஒரு பிரிவு ஆகியவை உள்ளன. அ.தி.மு.க.வின் ஒரு பிரிவும் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக இடம்பெற வாய்ப்புள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக கடத்திச் சென்று விட்டது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் நிதீஷ்குமாரை விட்டு விலகலாம். நிலையான அரசியல் கட்சிகளுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பதில்லை.

    பா.ஜ.க. துப்பாக்கி முனையில் கூட்டணிக் கட்சிகளை வைத்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியோ பரஸ்பரம் மதித்து நடந்து கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதாதளம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதுவே இரண்டு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடாகும்.

    பா.ஜ.க. தனது அரசியல் நலன்களை முன்னெடுக்க மத்திய விசாரணை அமைப்புகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உடைப்பதில் பா.ஜ.க. எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்பட்டது என்பதை நாம் கண்டோம்.

    வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா முடிவெடுத்தது குறித்துக் கேட்கிறீர்கள். அது பற்றி எனக்குத் தெரியாது. திரிணாமூல் காங்கிரசுடனான கூட்டணி முறியவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியா கூட்டணியில் திரிணாமூல் காங்கிரசும் இருக்காது என்ற முடிவுக்கு நான் ஏன் வர வேண்டும்?

    "ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கொள்கையானது முற்றிலும் அரசியல் சட்ட விரோதமானதும், கூட்டாட்சிக்கு எதிரானதுமான சிந்தனையாகும். அதை அமல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் ஐந்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் திருத்தங்களைச் செய்வதற்கான பெரும்பான்மை பலத்தை அவர்களால் (பா.ஜ.க.) திரட்ட முடியுமா என்பது சந்தேகமே.

    எதிர்க்கட்சி இல்லாமல் நாடு ஜனநாயக நாடாக இருக்காது. "ஒரே நாடு-ஒரே தேர்தல்' முறையில் மக்களவைக்கும், 29 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு மாநில அரசு சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுவிட்டால் அப்போது என்ன செய்வது? ஒரு மாநில அரசு ஆறு மாதங்களில் கவிழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு அந்த மாநிலத்தில் தேர்தலையே நடத்த மாட்டீர்களா?

    என்னைப் பொறுத்தவரை தேர்தல் பத்திரங்கள் என்பவை சட்டபூர்வமான லஞ்சமாகும் என்றார்.

    • சமத்துவம், நியாயம் மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை தேர்தல் பத்திரம் திட்டம் மீறியது.
    • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை, தேர்தலில் சமநிலை ஆகியவற்றிற்கு கிடைத்த வெற்றி.

    அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், நன்கொடை பெற்ற விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இதனால் ஒவ்வொரு கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் முதலாளிகளிடம் இருந்து எவ்வளவு பணம் நன்கொடையாக பெற்றது என்ற விவரம் மார்ச் 31-ந்தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது:-

    சமத்துவம், நியாயம் மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை தேர்தல் பத்திரம் திட்டம் மீறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை, தேர்தலில் சமநிலை ஆகியவற்றிற்கு கிடைத்த வெற்றி.

    தற்போது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலாளிகள் மூலம் பா.ஜனதா பெற்ற 90 சதவீத நன்கொடைகள் அம்பலமாகப் போகிறது.

    யார் பணம் கொடுத்தார்கள். அவர்கள் பணம் கொடுத்தபோது, அதற்கு பிரதிபலமான கட்சி கொடுத்தது என்ன? என்பதை உலகம் தெரிந்து கொள்ள போகிறது. அரசியல் கட்சிக்கு ஏன் பணம் கொடுக்கப்பட்டது என மக்கள் கேள்வி கேட்பார்கள். அதன்பின் மக்கள் தனது சொந்த முடிவை எழுதுவார்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.
    • உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.

    சென்னை:

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    1857 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது.

    கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடுதான் காரணம்.

    தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்? கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.

    உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
    • நாம் மிகப்பெரிய பொருளாதாரம், உலகில் மிகப்பெரிய வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் கொண்டு வந்துள்ளோம்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று நாட்டின் பொருளாதார சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இன்று விவாதம் நடைபெறும்போது மாநிலங்களை காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறுகையில் "உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால், களத்தில் ஏன் அதன் தாக்கம் உணரப்படவில்லை.

    நாம் மிகப்பெரிய பொருளாதாரம், உலகில் மிகப்பெரிய வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் கொண்டு வந்துள்ளோம். ஆனால், களத்தில் பார்க்க முடியவில்லையே? பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் பார்க்க முடியவில்லை என்பதை குறிப்பாக கேட்க விரும்புகிறேன்" என்றார்.

    • கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார்.
    • எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மஹபூப் நகரை சேர்ந்தவர் சிரிஷா என்ற பரெலக்கா. பட்டதாரி பெண்ணான இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு சிரிஷா தான் வளர்த்து வரும் மாடுகளுக்கு மத்தியில் வீடியோ எடுத்து, எருமை மாடுகளால் எப்படி வருமானம் கிடைக்கிறது, தன்னால் எப்படி படிப்பை தொடர முடிகிறது என விவரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    ஆயிரகணக்கான வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சிரிஷாவின் வீடியோவை பார்த்து அவருடன் சமூக வலைத்தளத்தில் இணைந்தனர்.

    இந்த நிலையில் கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    முதலில் சிரிஷாவின் தேர்தல் பிரசாரத்தை கண்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அலட்சியம் காட்டினர்.

    நாளுக்கு நாள் சிரிஷாவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வந்தது. ஆதரவு பெருகி வருவதால் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து தூக்கத்தை தொலைத்தனர்.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த சிரிஷா மற்றும் அவரது சகோதரரை சரமாரியாக தாக்கினர். சிரிஷா ரத்த காயங்களுடன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் மேலும் அவருக்கு ஆதரவு பெருகியது.

    தனக்கு அரசியல் கட்சிகளால் ஆபத்து உள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பெற்றார்.

    பல்வேறு தரப்பில் இருந்து சிரிசாவுக்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    தற்போது சிரிஷாவிற்கு சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அவருக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    • பாரதிய ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
    • புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

    சென்னை:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது-

    மத்திய புலனாய்வு அமைப்புகளை ஆளும் பாரதிய ஜனதா தனது சாதகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறது. இத்தகைய அமைப்பினர் தெலுங்கானாவில் குறைந்தது 4 காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்தல் பிரசாரத்தின் போது விசாரணைக்கு அழைத்ததுடன், அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை பா.ஜனதா வேட்பாளர் யாரையும் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வில்லை. இதன்மூலம் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

    பாரதியஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு தெய்வ ஆசீர்வாதம் உண்டு. ஒரு வேளை பாரதியஜனதா ஆட்சி அமைந்தால் தெலுங்கானா மக்களை அவர்கள் நேரடியாக சொர்க்கத்துக்கு கூட அழைத்து செல்வார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    • தமிழக அரசும் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிக்கிறார் என பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 10-ந்தேதி அன்று நடைபெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்றம் ஆளுநர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தது.

    அன்று நடைபெற்ற விசாணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள் நேற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்ற மசோதாக்களை கவர்னர்களின் அதிகாரங்களை கொண்டு முறியடித்துவிட முடியாது. ஜூன் 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவு எடுக்கும்படி நீதிபதிகள் தெரிவித்துள்ளது.

    இந்த கருத்தை மேற்கோள்காட்டிய ப.சிதம்பரம், "உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனம் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு மட்டுமல்ல. அனைத்து ஆளுநர்களுக்கும்தான். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, நீதிபதிகளின் கருத்துக்களை ஒவ்வொரு வரியாக படிக்க வேண்டும். தேவைப்பட்டால் திறமையான வழக்கறிஞரை அழைத்து விளக்கம் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
    • 1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானா போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்டார்.

    மேலும் சந்திரசேகர ராவ் வரலாற்று மாணவர் அல்ல. ஆந்திர பிரதேசத்தின் பெரும்பகுதி மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஐதராபாத் மாநிலம் இருந்தது.

    தெலுங்கு பேசும் மாநிலத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய இயக்கம் அப்போது இருந்தது. அப்படித்தான் தெலுங்கு பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது.

    ஒரு மாநிலத்தை உருவாக்குவது அல்லது ஒரு மாநிலத்தை பிரிப்பது குழந்தைகளின் விளையாட்டு அல்ல என கூறினார்.

    இதுகுறித்து பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் கூறியிருப்பதாவது:-

    மிகவும் தாமதம் சிதம்பரம் ஜி. தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

    1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.

    இப்போது, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், தெலுங்கானா மக்கள் காங்கிரஸ் எங்கள் மீது செய்த அட்டூழியங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். மறக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2026-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினாலும், இந்த பணி முடிய 2028-ம் ஆண்டு வரை ஆகும்.
    • மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதா அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, விருப்பமும் இல்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மாநிலங்கள் அவையில் இந்த மசோதா நிறைவேறியது. அதே வரைவு மசோதாவை நிறைவேற்றி ஒப்புதல் வாங்கி இருந்தால் 2024 தேர்தலுக்கே இச்சட்டம் அமலுக்கு வந்திருக்கும். ஆனால் பா.ஜனதா அரசு வேண்டுமென்றே 2 தடைகளை வைத்துள்ளது.

    ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மற்றொன்று தொகுதிகளை மறுவரையறை செய்வது.

    எனவே இச்சட்டம் 2024 தேர்தலில் மட்டுமல்ல, 2029 தேர்தலிலும் கூட அமலுக்கு வராது. காரணம் அரசியல் சாசனத்தில் 88-வது பிரிவில் 3-வது உட்பிரிவில் 2026-ம் ஆண்டிற்கு பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு என கூறப்பட்டுள்ளது.

    2026-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினாலும், இந்த பணி முடிய 2028-ம் ஆண்டு வரை ஆகும். அதன்பிறகு அடுத்த தடையாக தொகுதியை மறுவரையறை செய்ய வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளையும் மறுவரை செய்ய வேண்டும் என்பது கடினமான பணியாகும். எனவே இச்சட்டம் நிச்சயம் அமலுக்கு வராது.

    மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதா அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, விருப்பமும் இல்லை.

    543 தொகுதிகளிலும் மக்கள்தொகை அடிப்படையிலான மறு வரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும், வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்ததும் தவறு. அதனை செல்லாது என்று அறிவித்ததும் தவறு.

    இந்தியா கூட்டணியில் பிளவு என்பதே கிடையாது. நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறுபக்கம் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. காவிரி பிரச்சினையில் இரு மாநிலத்தவரும் அவரவர் கோரிக்கையை வலியுறுத்துவர்.

    தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க இயலாது என உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது.
    • இதில் முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் பங்கேற்றார்.

    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.

    இதைச் செயல்படுத்தக் குறைந்தது 5 அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பா.ஜ.க.வில் போதிய அளவில் எம்.பி.க்கள் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும்.

    இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மாயையை முன்வைத்து உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் கோபம் வந்துள்ளது
    • பாரத் பெயர் மாற்றம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பாரத் என இருக்கிறது. இந்தியாவும் இருக்கிறது. பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம். பாரத்தையும் பயன்படுத்துகிறோம். திடீரென இந்தியா மீது என்ன கோபம்?.

    எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் கோபம் வந்துள்ளது. நாங்கள் Bharat என பெயரை சுருக்கி வைத்தால், பிரதமர் மோடி பாரத் பெயரையும் மாற்றி விடுவாரா?. இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள். இந்தியா என்பதும் ஒன்றுதான். பாரத் என்பதும் என்றுதான்.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்தார்.

    ×